சிறைப் பாதுகாப்பில் கவனக்குறைவு ஏற்பட்டால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை .... முதல்வர் விஜய் எச்சரிக்கை!
தேனி மாவட்டம் தேக்கம்பட்டி கிளைச் சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைப் பொறுப்புக் கண்காணிப்பாளர் நாகேஸ்வரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சிறையில் நடைபெற்ற இந்தப் பாதுகாப்பு குறைபாடு குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதிகள் தப்பியோடிய சம்பவத்தில் பணியில் இருந்த அதிகாரிகளின் பொறுப்புகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, சிறைகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் எவ்விதத் தொய்வும் ஏற்படக்கூடாது என்று முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிறை வளாகங்களில் பாதுகாப்புப் பணிகளை அதிகாரிகள் முழுமையாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், மெத்தனமாகவோ கவனக்குறைவாகவோ செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.17 கைதிகள் தப்பிய சம்பவத்தைத் தொடர்ந்து சிறைத்துறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.