வலுவடையும் காற்றழுத்தம்... இன்று தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த வானிலை மாற்றம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், வட கடலோர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.வங்கக்கடலில் நிலவும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வு மற்றும் வலுப்பெறும் தன்மையை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.