செங்கல்பட்டில் ராக்கெட் லாஞ்சர் வெடித்து மாணவன் உயிரிழப்பு... மிதித்ததுமே 'ஸ்பாட்' அவுட்!
செங்கல்பட்டு அருகே உள்ள அனுமந்தபுரத்தில் ராணுவத்தின் துப்பாக்கிச் சூடு பயிற்சி மையம் உள்ளது. இங்கு பொத்தேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் வடமாநில மாணவர்கள் சிலர் இன்று காலையில் ஜாலியாக 'டிரெக்கிங்' சென்றுள்ளனர்.
மலைப் பகுதியில் அவர்கள் ஏறிக் கொண்டிருந்த போது, புதருக்குள் வெடிக்காமல் கிடந்த 'ராக்கெட் லாஞ்சர்' குண்டு ஒன்றை ஒரு மாணவன் எதிர்பாராத விதமாக மிதித்துள்ளார். அடுத்த விநாடியே அது பயங்கரச் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது!
இந்த கோர விபத்தில் அந்த மாணவன் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தான். உடன் சென்ற மற்ற மாணவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர்.
ராணுவப் பயிற்சி மையத்தைச் சுற்றியுள்ள தடை செய்யப்பட்ட பகுதிக்குள் மாணவர்கள் எப்படி நுழைந்தார்கள்? பாதுகாப்பு வேலிகள் இருந்ததா? என்பது குறித்து செங்கல்பட்டு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.