கல்லூரி விடுதியில் அறையில் மாணவி சடலமாக மீட்பு... காஞ்சிபுரத்தில் அடுத்த பரபரப்பு!
காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் உள்ள பிரபல தனியார் கல்லூரி விடுதி அறையில் மூன்றாம் ஆண்டு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வந்த நிகிதா என்ற மாணவி, கல்லூரி விடுதி அறையில் தங்கியிருந்துள்ளார். மாணவி தங்கியிருந்த அறை தொடர்ந்து பூட்டப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து துர்நாற்றம் வீசியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் விடுதி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தனர். கதவை உடைத்துப் பார்த்தபோது மாணவி நிகிதா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், மாணவியின் தற்கொலைக்கான காரணம் என்ன? குடும்பப் பிரச்சினையா அல்லது வேறு ஏதேனும் மன உளைச்சலா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.