மதிய உணவில் சிக்கன் வழங்காததால் தலைமையாசிரியரைத் தாக்கிய மாணவர்கள்!
மேற்குவங்க மாநிலத்தில் ஆசிரியர் தினத்தைக் முன்னிட்டுப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் தங்களுக்குக் கூடுதலாகச் சிக்கன் வழங்கப்படவில்லை எனக் கூறி, மாணவர்கள் தலைமை ஆசிரியரைத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட மதிய உணவில், தங்களுக்குக் கூடுதலாகச் சிக்கன் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் த தங்களிடம் தொடர்ச்சியாக மிகவும் கடுமையாக நடந்து கொண்டதாகவும், வழக்கமான தினசரி மதிய உணவில் மாணவர்களுக்கான முட்டை கூட வழங்குவதில்லை என்றும் மாணவர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த மேற்குவங்க மாநிலக் காவல்துறையினர் உடனடியாகப் பள்ளிககுச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.