காதலர் தின ஸ்பெஷல் வீடியோ... அலையென புரளும் கூந்தல்... ஸ்டைலிஷான நயன்தாரா... !
தமிழ் திரையுலகில் “ ஐயா” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி லேடி சூப்பர் ஸ்டாராக தன்னை உயர்த்திக் கொண்டவர் நடிகை நயன்தாரா. ஐயா படத்திற்கு பிறகு வெளியான சந்திரமுகி படத்தின் மூலம் ரஜினி ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையானார். இன்று பிப்ரவரி 14 உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நயன் தாரா சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பான் இந்தியா நடிகையாகவும் மாறியுள்ளார்.
தமிழில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான அன்னபூரணை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதே சமயம் தற்போது தமிழில் நடிகை நயன்தாரா மண்ணாங்கட்டி என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்தடுத்த பல படங்களில் கமிட்டாகி வருகிறார்.
பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா வாடகை தாயின் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானார்.
சமீபமாக இன்ஸ்டாவில் புதிய கணக்கை தொடங்கிய நயன் தொடர்ந்து இதில் பல புகைப்படங்கள், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.அது மட்டும் இல்லாமல் நடிகை நயன்தாரா தொழிலதிபராகவும் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார். காதலர் தினத்திற்காக வெளியான இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!