வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஸ்டார்ஷிப் ராக்கெட் - பூஸ்டரை ஏவுதளத்தில் பிடிக்கும் முயற்சி கடைசி நேரத்தில் மாற்றம்!

 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 15-வது ஸ்டார்ஷிப் ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்கலத்தின் ஒட்டுமொத்தப் பயணம் வெற்றிகரமாக அமைந்த போதிலும், தொழில்நுட்பக் காரணங்களால் ராக்கெட்டின் சூப்பர் ஹெவி பூஸ்டரை ஏவுதளத்தில் ஏந்திப் பிடிக்கும் முயற்சி கடைசி நேரத்தில் கைவிடப்பட்டுப் பாதுகாப்பாகக் கடலில் இறக்கப்பட்டது.

மனிதர்களை நிலவு மற்றும் செவ்வாய்க் கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் லட்சியத் திட்டத்திற்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகளைத் தொடர்ந்து பரிசோதித்து வருகிறது.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/RHY66XujZ90?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/RHY66XujZ90/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

டெக்சாஸ் ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்ட ஸ்டார்ஷிப் ராக்கெட், தனது திட்டமிடப்பட்ட பாதையில் வெற்றிகரமாகப் பயணித்து விண்வெளியை நோக்கிச் சென்றது. இந்நிகழ்வு விண்வெளி அறிவியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ராக்கெட்டின் முதல் நிலையான 'சூப்பர் ஹெவி பூஸ்டர்' முந்தைய சோதனைகளைப் போல ஏவுதளத்தின் 'மெக்கானிகல் ஆர்ம்ஸ்' மூலம் பிடிக்கும் தொழில்நுட்ப முறையின் மூலம் தரையிறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டு, பூஸ்டர் பாதுகாப்பான முறையில் கடல் பகுதியில் இறக்கப்பட்டது.

விண்கலத்தின் கட்டமைப்பு மற்றும் என்ஜின் செயல்பாடுகள் குறித்த தரவுகளை ஸ்பேஸ்எக்ஸ் பொறியாளர்கள் தற்போது தீவிரமாக அனலைஸ் செய்து வருகின்றனர். இந்தப் பரிசோதனையில் பெறப்பட்ட அனுபவங்களைக் கொண்டு, எதிர்காலச் சோதனைகளை மேலும் துல்லியமாக மேற்கொள்ள அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.