கோவையில் அடுத்தடுத்துக் கொலைகள்... தவெக அரசுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு!

 

கோயம்புத்தூரில் கடந்த 10 நாட்களில் 3 இளைஞர்கள் அடுத்தடுத்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சட்டம்-ஒழுங்கு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 3 நவீன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.. ஆகஸ்ட் 6: அஸ்வின் என்ற இளைஞர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். ஆகஸ்ட் 10: மளுமிச்சம்பட்டி பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் (19) சக மாணவர் கும்பலால் ஆயுதங்களால் தாக்கப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

கல்லூரி மாணவர் அமுதன் கொலையில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் கோஷ்டி மோதல் காரணங்களாகக் கூறப்படும் நிலையில், இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறுகிய காலத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த வரிசைக் கொலைகள் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "இதுதான் தமிழகத்தின் மாற்றமா?" என்றும், குற்றச் சம்பவங்களைத் தடுக்க அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.