திடீர் மாரடைப்பு... முன்னாள் சர்வதேச  கூடைப்பந்து வீரர், பிரபல மருத்துவர் ஜான் செல்வகுமார் பாண்டியன் காலமானார்!

 

தஞ்சாவூரைச் சேர்ந்த முன்னாள் சர்வதேச கூடைப்பந்து வீரரும், ஓய்வுபெற்ற மயக்க மருந்து நிபுணருமான மருத்துவர் ஜான் செல்வகுமார் பாண்டியன் (67) மாரடைப்பு காரணமாக நேற்று மாலை காலமானார்.

காரைக்காலில் இருந்து தஞ்சாவூர் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோது, நாகப்பட்டினம் அருகே அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது சகோதரர் ஜோதி பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக கூடைப்பந்து அணிகளுக்காகப் பலமுறை விளையாடி முத்திரை பதித்த இவர், 1985-ஆம் ஆண்டு இந்திய தேசிய கூடைப்பந்து அணியிலும் இடம்பெற்று சர்வதேச அளவில் விளையாடியுள்ளார்.

விளையாட்டுத் துறையோடு மட்டுமன்றி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மயக்க மருந்து நிபுணராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.