திடீர் உடல்நலக் குறைவு... அன்னா ஹசாரே ஐசியூவில் அனுமதி - தீவிர சிகிச்சை!
Sep 1, 2026, 07:15 IST
பிரபல சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, மும்பை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
87 வயதான அண்ணா ஹசாரே வைரஸ் தொற்று, நீரிழப்பு மற்றும் சிறுநீரகச் சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் தனது சொந்த ஊரான ரலேகன் சித்தியில் சிகிச்சை பெற்று வந்த அவர், மேல்சிகிச்சை மற்றும் மேம்பட்ட மருத்துவ வசதிக்காக உடனடியாக மும்பைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ள அவர், விரைவில் முழுமையாகக் குணமடைய வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள பொதுமக்களும் தொண்டர்களும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.