திடீர் திருப்பம்... விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா - வழக்கை முடித்து வைத்தது செங்கல்பட்டு நீதிமன்றம்!
Aug 7, 2026, 16:08 IST
தமிழக முதலமைச்சர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்திருந்த மனுவை அவரது மனைவி சங்கீதா முறைப்படி திரும்பப் பெற்றுள்ளார். முதலமைச்சர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி, அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
தற்போதைய புதிய திருப்பமாக, தான் தொடர்ந்த விவாகரத்து மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகச் சங்கீதா நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட செங்கல்பட்டு நீதிமன்றம், விவாகரத்து வழக்கை அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்குத் தொடரப்பட்ட காலத்திலிருந்தே இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த முடிவுக்குப் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.