இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி...  சர்க்கரை விலை கிடுகிடு உயர்வு....  ஒரு கிலோ ரூ.67-க்கு விற்பனை!

 

 

தமிழகத்தில் சர்க்கரை விலை திடீரென கிடுகிடுவென உயர்ந்து தற்போது ஒரு கிலோ 67 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வெறும் 45 ரூபாய்க்கு விற்கப்பட்ட சர்க்கரை, தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விலையேற்றத்திற்கான முக்கியக் காரணங்கள்:

  • பிற மாநிலங்களில் கரும்பு உற்பத்தி குறைந்துள்ளதும், பண்டிகைக் காலத்தையொட்டிப் பதுக்கல் நடைபெற்றதும் விலையேற்றத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.ஈ-20 பெட்ரோல் தயாரிப்புக்காகக் கரும்பிலிருந்து எடுக்கப்படும் எத்தநாளின் தேவை அதிகரித்துள்ளதால், ஒட்டுமொத்தமாகக் கரும்புக்கான தேவைப்பாடும் உயர்ந்துள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் விலை உயர்வால் இல்லத்தரசிகள் மற்றும் நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.