துலாம் ராசியில் சூரியப் பெயர்ச்சி.. இந்த 3 ராசிக்காரர்கள் சொத்துக்கள் வாங்குவதில் அவசரப்பட வேண்டாம் | 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!
ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் தலைவனான சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வு 'சூரியப் பெயர்ச்சி' அல்லது 'சங்கராந்தி' என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது கன்னி ராசியில் சஞ்சரித்து வரும் சூரிய பகவான், துலாம் ராசிக்கு மாறுகிறார். ஜோதிட ரீதியில் துலாம் ராசி சூரியனுக்கு 'நீச்ச' வீடாகும். இந்த இடமாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கை, தொழில், பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியது.
மேஷம்: தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கணவன்-மனைவி இடையே அனுசரித்துச் செல்வது நன்தைத் தரும்.
ரிஷபம்: எதிரிகளின் தொல்லைகள் விலகும். உத்தியோகத்தில் இருப்போருக்கு புதிய பொறுப்புகளும் மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாட்களாகத் தடைபட்டிருந்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.
மிதுனம்: பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. கலைத்துறையில் இருப்போருக்குச் புதிய வாய்ப்புகள் தாமதமாகக் கிடைக்கும். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம்.
கடகம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவினாலும், தாய்வழி உறவினர்களுடன் சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அவசரம் காட்ட வேண்டாம்.
சிம்மம்: உங்களது தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். சகோதரர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். குறுகிய தூர பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
கன்னி: பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். குடும்பத்தினரிடம் அனுசரித்துச் செல்வது தேவையற்ற சண்டைகளைத் தவிர்க்கும். பொருளாதார ரீதியில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
துலாம்: உங்கள் ராசிக்குள் சூரியன் நுழைவதால் உடல்நிலையில் சோர்வு மற்றும் அலைச்சல்கள் இருக்கக்கூடும். சுயமரியாதைப் பிரச்சினைகள் தலைதூக்கலாம் என்பதால் எதிலும் பொறுமையைக் கையாளவும்.
விருச்சிகம்: வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தினால் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கலாம்.
தனுசு: நண்பர்களின் மூலம் புதிய லாபகரமான வாய்ப்புகள் தேடி வரும். சமூகப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பாராட்டுகள் கிடைக்கும். மூத்த சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டு.
மகரம்: தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய இலக்குகளை அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு அல்லது இடமாற்றம் குறித்த சாதகமான தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
கும்பம்: தந்தை வழி உறவுகள் மூலம் அனுகூலம் கிடைக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்களால் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும்.
மீனம்: உடல் ஆரோக்கியத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் நடவடிக்கைகளில் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது பெரியவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.