பிரபல சீரியல் நடிகைக்கு விரைவில் டும் டும்.. நிச்சயதார்த்தம் போட்டோஸ் இணையத்தில் வைரல்..!!

 

சின்னத்திரை நடிகை ஸ்வேதாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

கடந்த சில நாட்களாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்களுக்கு நிச்சயம் மற்றும் திருமணம் நடைப்பெற்று வருகிறது.  இணையத்தையே கலக்கி வருகின்றனர். நேற்று முன் தினம் கூட பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்க்ஸ்லி சீரியல் நடிகையை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த வகையில் சன் டிவி சீரியலில் ஒளிபரப்பாகி வரும் ‘வானத்தைப் போல’ சீரியலில் பிரபலமானவர் நடிகை ஸ்வேதா. பெங்களூரு பெண்ணான இவர் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துள்ளார். நடிப்பின் மீதான ஆர்வத்தால் சின்னத்திரைக்கு வந்துள்ளார். பின் ‘வானத்தைப் போல’ சீரியலில் நடித்து பிரபலமானார். பின்பு, சில காரணங்களால் அந்த சீரியலில் இருந்து விலகினார்.

இந்த நிலையில், அவருக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இசைக் கலைஞர் கிரிஷ் என்பவரும்  நடிகை ஸ்வேதாவும் காதலித்து வந்த நிலையில் நிச்சயதார்த்தம் செய்துள்ளார் ஸ்வேதா. இவரது திருமண நிச்சயதார்த்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.