ஆடி ஞாயிறு.. தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

 

வார இறுதி விடுமுறை நாட்கள் நிறைவு மற்றும் ஆடி மாத ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காகத் தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம், நெல்லை மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும், பிற மாவட்ட தலைநகரங்களில் இருந்தும் கூடுதலாகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆடி ஞாயிறை முன்னிட்டு சமயபுரம், மேல்மருவத்தூர், திருவண்ணாமலை, மாங்காடு, சிறுவாச்சூர் உள்ளிட்ட புகழ்பெற்ற புனிதத் தலங்கள் மற்றும் அம்மன் கோவில்களுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காகச் சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வார விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் தங்களது பணி இடங்களுக்குத் திரும்புவதைக் கருத்தில் கொண்டு, ஞாயிறு இரவு சிறப்புப் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் தங்களது பயணத்தைச் சிரமமின்றி மேற்கொள்ள TNSTC செயலி மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.