undefined

கொடூரம்... மாதவிலக்கு பெண்   சுகாதார ஊழியர்களை  புகைப்படம் எடுத்து நிரூபிக்க சொன்ன  சூப்பர்வைசர் !  

 
 

அரியானா மாநிலம் ரோத்தக் பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பெண்கள் சுகாதார ஊழியர்கள் மீது அவமதிப்பான முறையில் நடந்துகொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாதவிடாய் காரணமாக பணிக்கு தாமதமாக வந்த நான்கு தூய்மை பணியாளர்களிடம், அவர்கள் மீது மேலதிகாரிகள் எடுத்த நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

சூப்பர்வைசர்களான வினோத் மற்றும் ஜிதேந்திரா ஆகியோர், பெண்கள் மாதவிடாயில் உள்ளதாக கூறியதை நிரூபிக்க புகைப்படம் எடுக்குமாறு மற்றொரு பெண் ஊழியருக்கு உத்தரவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பணி நீக்கம் செய்வோம் என்ற மிரட்டலால் இரண்டு பெண்கள் கழிப்பறைக்குச் சென்று தங்களைப் புகைப்படம் எடுத்து வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதும் கடும் எதிர்வினை ஏற்பட்டது. இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் ஒரு சூப்பர்வைசரை இடைநீக்கம் செய்து, இருவர்மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. மேலும், தேவையானால் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!