திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: அறங்காவலர் குழுவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அதிரடி!
திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் மற்றும் அறங்காவலர் குழு மாற்றம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழுவை உடனடியாகக் கலைத்து, மறு உத்தரவு வரும் வரை குழு செயல்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் கோயில் நிர்வாகத்தைக் கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய புதிய குழுவை நியமித்து, நிர்வாகத்தை உடனடியாக ஒப்படைக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கிய உயர் நீதிமன்ற உத்தரவிற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையையும் உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை டிசம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் தலைமைச் செயலர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது