நாடு முழுவதும் ஆசிட் சில்லறை விற்பனைக்கு முற்றிலும் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

 

தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் ஆசிட்டைச் சில்லறையாக விற்பனை செய்வதற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. ஆசிட் மருத்துவப் பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், அரசு மருத்துவமனை மருந்தகங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கட்டுப்பாடின்றி ஆசிட் விற்பனை செய்யப்படுவதே ஆசிட் வீச்சு சம்பவங்கள் அதிகரிக்க முக்கியக் காரணமாக இருப்பதாக உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. இந்த அபாயத்தைத் தடுக்கத் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் ஆசிட்டைச் சில்லறையாக விற்பனை செய்வதற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆசிட் மருத்துவப் பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. ஆசிட் விற்பனையைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும், அரசு மருத்துவமனை மருந்தகங்களில் மட்டுமே அதனை விற்பனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.