ராகுல் காந்தி மீதான வழக்கு - உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

 

இந்திய ராணுவம் குறித்து அவதூறாகப் பேசியதாக உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பதியப்பட்ட இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக அனுப்பப்பட்ட சம்மன் நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கு ராகுல் காந்திக்கு எதிரான மற்றொரு அவதூறு வழக்கோடு இணைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

ராகுல் காந்திக்கு எதிரான வழக்குகளைத் தனித்தனியாக விசாரிக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு விரைவான தேதியை அறிவிக்க வேண்டும் என்றும் மனுதாரரின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், சம்மன் நிறுத்தி வைக்கப்பட்டதன் பலனை அவர் தொடர்ந்து பெற்று வருவதாகவும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.