தவெக அமைச்சர்கள் கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு திடீர் விசிட்... மாநிலச் செயலாளர் சண்முகத்துடன் பேச்சுவார்த்தை!

 

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகத்தை தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குச் சென்ற தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல்குமார் ஆகியோர், சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகத்தை நேரில் சந்தித்துப் பேசினர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுடன் தவெக அமைச்சர்கள் நடத்தியுள்ள இந்தத் திடீர் ஆலோசனைக் கூட்டம் தமிழக அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்களையும் எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.