சொப்னா 3வது திருமணம்... தங்கம் கடத்தல் வழக்கில் கைதான சரித்தை கரம் பிடித்தார்!

 

துபாயில் இருந்து தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சொப்னா சுரேஷ், அதே வழக்கில் தன்னுடன் கைது செய்யப்பட்ட சரித் என்பவரைத் தற்போது மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு துபாயில் இருந்து திருவனந்தபுரத்திற்குத் தூதரகப் பார்சல் மூலம் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுங்கத்துறை, சிபிஐ மற்றும் தேசிய புலனாய்வு முகமை ஆகியவை நடத்திய தீவிர விசாரணையில் சொப்னா சுரேஷ், சரித் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளது.

இத்தங்கம் கடத்தல் வழக்கில் கைதாகி முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்பட்ட சொப்னாவும் சரித்தும், கொச்சியில் உள்ள ஒரு கோயிலில் வைத்து நேற்று முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது சொப்னா சுரேஷின் மூன்றாவது திருமணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.