இன்று பள்ளிகளில் சர்க்கரை பொங்கல்!!

 

 கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  இன்று ஆகஸ்ட் 14ம் தேதி திங்கட்கிழமை   பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி, சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் அரசு பள்ளிகளில் மாணவ – மாணவிகளுக்கு இன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படுகிறது.தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும்  ஜூன் 3ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.  நடப்பாண்டு அவரது நூற்றாண்டு விழா  தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை  முன்னிட்டு   ஜூன் 3ல் கருணாநிதி பிறந்த தினத்தன்று இனிப்புப் பொங்கல் வழங்க தமிழக  அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படவில்லை.  

தமிழகம் முழுவதும்   அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில்  மதிய உணவு சத்துணவாக வழங்கப்பட்டு வருகிறது.  ஏற்கனவே  முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் மற்தம்றும் ஜெ.ஜெயலலிதா  பிறந்த நாட்களில் இனிப்புப் பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் மு.கருணாநிதியின் பிறந்த நாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என தமிழக  அரசு அறிவித்திருந்தது.


இந்த ஆண்டு கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 ம் தேதி  பள்ளிகள் திறக்கப்படாததால் இனிப்புப் பொங்கல் வழங்கப்படவில்லை.இந்நிலையில் ஆகஸ்ட் 14ம் தேதி இன்று  கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளிகளில் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!