சுவிட்சர்லாந்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து! 5 பேர் பலி; 40 பேர் படுகாயம்!

 

 

சுவிட்சர்லாந்து நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள அல்பைன் (Alpine) மலைப் பகுதியில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

allowfullscreen

  • விபத்து பின்னணி: சுவிட்சர்லாந்தின் கிராபியுண்டன் (Graubuenden) மாகாணத்தில் உள்ள சுஷ் (Susch) மற்றும் ஜெர்னெஸ் (Zernez) கிராமங்களுக்கு இடைப்பட்ட சாலைப் பகுதியில் சென்றுகொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து, எதிர்பாராதவிதமாகச் சாலையின் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

  • பாதிக்கப்பட்டவர்கள்: நெதர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஓட்டுநர் உள்பட மொத்தம் 45 முதல் 48 பேர் வரை அந்தப் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 40 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • மீட்புப் பணிகள்: விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் உடனடியாக 7 மீட்பு ஹெலிகாப்டர்கள் மற்றும் 13 ஆம்லென்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீவிர மீட்புப் பணிகள் நடைபெற்றன. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.