இந்திய மகளிர் அணி பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி!

 

 

2026 மகளிர் டி20 ஆசிய கோப்பை லீக் போட்டியில் நேற்று பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பந்துவீசிய இந்திய அணியில் ஸ்ரீ சரணி சிறப்பாகச் செயல்பட்டு, வெறும் 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

allowfullscreen

அவரது சிறப்பான பந்துவீச்சுத் திறனால் பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. தொடர்ந்து எளிய இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணி 8.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்து வெற்றியைப் பெற்றது.

சர்வதேச ஆசிய கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தச் சிறப்பான வெற்றி இந்திய அணிக்குமிகுந்த உற்சாகத்தைத் அளித்துள்ளது. வீராங்கனைகளின் இந்தச் சீரான ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.