நோட் பண்ணிக்கோங்க.. சென்னையில் நாளை மறுநாள் மின் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம்!

 

சென்னையில் மின் வாரியப் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் ஆகஸ்ட் 13ம் தேதி, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.

கே.கே. நகர்:
காவேரி ரங்கன் நகர், கே.கே. சாலை, லோகையா காலனி, தசரதபுரம், ஆற்காடு சாலை, பாலாஜி நகர், பாஸ்கர் காலனி, மதியழகன் நகர், அருணாச்சலம் சாலை, குமரன் காலனி, காந்தி நகர், தேவராஜ் நகர், எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் சாலை, பரணி காலனி, காவேரி மருத்துவமனை தெரு, சூர்யா தெரு, 80 அடி சாலை, எம்.ஜி. சக்கரபாணி தெரு, பிக் பஜார், பாஸ்போர்ட் அலுவலகம், என்.எஸ்.கே. லேன், சியாமளா டவர், முனுசாமி தெரு, கஸ்தூரி தெரு, விநாயகம் தெரு, காமராஜர் சாலை, வெங்கடேச நகர்.

பாலவாக்கம்:
காமராஜர் பிரதான சாலை, கரீம் நகர், மகாத்மா காந்தி நகர், சங்கம் காலனி 1 மற்றும் 2-வது தெருக்கள், கந்தசாமி நகர் 1 முதல் 7-வது தெருக்கள் வரை, மணியம்மை தெரு, திருவான்மியூர் அவ்வை நகர், வெங்கடேசபுரம், கண்ணப்பன் நகர், பாரதி நகர்.

பல்லாவரம்:
பம்மல் பிரதான சாலை, ஆடுத்தொட்டி, கிருஷ்ணா நகர், முத்தமிழ் நகர், என்.எஸ்.கே. தெரு, நடராஜன் தெரு, பிருந்தாவன் காலனி, கென்னடி தெரு, மூங்கலேரி.