தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சி தலைவர் வியனரசு துணைவியார் காலமானார்... சீமான் இரங்கல்!
தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சியின் தலைவர் வியனரசுவின் துணைவியார் மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சியின் தலைவரும், தமிழ்த்தேசிய அரசியல் களத்தின் மூத்த செயற்பாட்டாளர்களுள் ஒருவருமான ஆருயிர் அண்ணன் அ.வியனரசு அவர்களின் வாழ்விணையர், அண்ணியார் வி.கோகிலா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
உற்ற துணையை இழந்து வாடும் அண்ணன் வியனரசு அவர்களுக்கும், அன்புமகள்கள் குறள்மொழி, கயல்விழி, அன்புமகன் தமிழ்நெறி ஆகியோருக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சி உறவுகளுக்கும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அண்ணியார் வி.கோகிலா அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! என்று தனது இரங்கல் குறிப்பில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.