"தமிழகமே.. தலைப்புச் செய்திக்கு ரெடியா?" - செம மாஸ் தேர்தல் அறிக்கை - ஸ்டாலின் அதிரடி!

 

2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது தேர்தல் அறிக்கையை இன்று மாலை வெளியிடுகிறது. வழக்கமாகத் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பே அதன் முக்கிய அம்சங்கள் கசியும். ஆனால், இந்த முறை மிகவும் ரகசியமாகவும், அதே சமயம் பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டும் விதமாகவும் திமுக காய்களை நகர்த்தியுள்ளது.

"தமிழ்நாடே... தலைப்புச் செய்திக்கு ரெடியா?" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளது, இந்த அறிக்கையில் மிகப்பெரிய 'மெகா' அறிவிப்புகள் அல்லது அதிரடித் திட்டங்கள் இடம்பெற்றிருக்கலாம் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.

அரசியல் நோக்கர்களின் கணிப்புப்படி, திமுகவின் 2026 தேர்தல் அறிக்கையில், மகளிர் உரிமைத் தொகை: தற்போதைய 1,000 ரூபாயை உயர்த்துவது குறித்த அறிவிப்பு,  அரசு மற்றும் தனியார் துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் உதவித்தொகை திட்டங்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்கச் சிறப்புத் திட்டங்கள். மெட்ரோ ரயில் விரிவாக்கம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் அடுத்த கட்டம்.

ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு 2,000 ரூபாய், இலவச மின்சாரம் போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்துள்ள நிலையில், அதற்குப் போட்டியாகவோ அல்லது அதை விஞ்சும் வகையிலோ ஸ்டாலினின் 'தலைப்புச் செய்தி' இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.