undefined

தமிழக மீனவர்கள் 35 பேர் கைது... இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

 

தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மற்றும் காரைக்கால் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து நேற்று இரவு ஒரு நாட்டுப் படகு மற்றும் மூன்று விசைப்படகுகளில் 35 மீனவர்கள் பாக் வளைகுடா கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர். அவர்கள் மீன்பிடித்தது இலங்கை கடற்படை எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் ரோந்து படகுகளில் வந்து அவர்களை முற்றுகையிட்டு கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, பின்னர் *யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்* என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர் என இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் நாகை மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் யாழ்ப்பாண மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மீனவர்களின் குடும்பங்களில் கவலையை ஏற்படுத்தி, தமிழக கடலோரப் பகுதிகளில் பதற்றநிலையை உருவாக்கியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?