undefined

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் தனியார் நிகழ்ச்சிகள் நடத்த தடை... பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

 

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் என்ஜிஓக்கள், தனியார் நிகழ்ச்சிகள் நடத்த தடைவிதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிகளில் தனியார் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க கூடாது. துறையின் அனுமதி இல்லாமல் யாருக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், சுற்றறிக்கைகளை கூட சரியாக தயாரிக்க தெரியாத சிஇஓக்கள் இருப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அரசு பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் என்சிசி, சொற்பொழிவு உள்ளிட்ட எந்த வகையிலும் வெளியாட்கள் நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களே மாணவர்களை ஊக்கப்படுத்தலாம். இனி வெளி ஆட்களை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்த தடை விதித்துள்ளது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா