அருகருகே அமர்ந்த தமிழக முதல்வர் விஜய் - கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் - தென்மண்டல முதல்வர்கள் மாநாடு!
சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள பிரபல விடுதியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 31-வது தென்மண்டல முதல்வர்கள் மாநாடு கோலாகலமாகத் தொடங்கியது.
இம்மாநாட்டை நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தென்மண்டலக் குழுவின் சுழற்சி முறையிலான துணைத் தலைவராகப் பொறுப்பேற்று அமர்வுகளைத் தலைமை தாங்கி நடத்துகிறார்.
மாநிலங்களுக்கு இடையேயான எல்லை மற்றும் நதிநீர் சிக்கல்கள், உள்நாட்டுப் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, கடலோரக் காவல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநாட்டின் அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யும், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரும் அருகருகே அமர்ந்துள்ளனர்.
காவேரி நதிநீர் பங்கீடு மற்றும் மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு - கர்நாடகா இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில், இரு மாநிலத் தலைவர்களும் ஒரே மேடையில் பக்கத்து பக்கத்தில் அமர்ந்துள்ள நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.