சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு மாற்றக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

 

சென்னை விமான நிலையத்தின் நிர்வாகப் பொறுப்புகளைத் தனியாருக்கு மாற்றக் கோரி, தமிழக முதலமைச்சர் விஜய் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதமே இக்கடிதம் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்தத் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னை விமான நிலையத்தை தற்போது நிர்வகித்து வரும் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு பதிலாக, வேறு ஒரு தனியார் நிறுவனத்தை இயக்குநராக நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் மற்றும் சேவைகளை மேலும் மேம்படுத்தி, உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதற்காகவே இந்த நிர்வாக மாற்றம் அவசியமெனக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.