தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை - 10 அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை!
வரவிருக்கும் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தொடர்பாக, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் 10 முக்கிய அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய நிதியாண்டிற்கான பட்ஜெட் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த முன் தயாரிப்புக் கூட்டம் நடைபெறுகிறது.
கல்வி, சுகாதாரம், விவசாயம், நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட முக்கியத் துறைகளின் தேவைகள் மற்றும் புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளைச் செயல்படுத்துவது மற்றும் மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமை அளித்து பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்து அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.
நிதி அமைச்சர் தலைமையில் பட்ஜெட் உரையைத் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், துறை வாரியான கோரிக்கைகளை இறுதி செய்யவும் திட்டங்களைச் சீரமைக்கவும் முதலமைச்சரின் இந்த நேரடி ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.