ஆக.3ல் கர்நாடகா செல்கிறார் தமிழக முதல்வர் விஜய் - அமைச்சர் வினோத் தகவல்!
Jul 24, 2026, 14:40 IST
தமிழக முதலமைச்சர் விஜய் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.
இந்த அரசுமுறைப் பயணத்தின் போது, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாரை நேரில் சந்தித்து காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு திட்டமிட்டுள்ள மேகதாது அணை விவகாரம் மற்றும் தமிழகத்திற்கு உரிய நீர் பங்கீடு தொடர்பாக விரிவாகப் பேச முதல்வர் திட்டமிட்டுள்ளார்.
மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அண கட்ட எந்தச் சூழலிலும் தமிழக அரசு அனுமதிக்காது என்பதில் உறுதியாக உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், மாநிலத்தின் நீர் உரிமையை நிலைநாட்டவுமே இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.