தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள், பூங்காக்கள் மேம்படுத்தப்படும் - முதல்வர் விஜய் அறிவிப்பு!

 

தமிழகத்தில் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் பள்ளிகள் மற்றும் பூங்காக்களை நவீனப்படுத்தும் புதிய திட்டங்களை முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் புதிய வகுப்பறைகளைக் கட்டுதல் மற்றும் நவீன வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மொத்தம் ரூ. 335 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

மாநிலம் முழுவதும் உள்ள 250 பொழுதுபோக்குப் பூங்காக்கள் ரூ. 175 கோடி செலவில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூங்காக்கள் மற்றும் பொதுவெளிகளின் வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, மக்கள் இயக்கத்தின் மூலமாகத் தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.