முதலமைச்சர் விஜய்யின் குடும்பத்தில் சோகம்: பெரியம்மா அமல் ராஜசேகர் காலமானார்!

 

 

தமிழக முதலமைச்சர் விஜய்யின் பெரியம்மா அமல் ராஜசேகர் வயது மூப்பின் காரணமாக காலமானார். அவரது மறைவுச் செய்தி விஜய் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி அரசியலில் களமிறங்கிய விஜய், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில், விஜய்யின் தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரின் மூத்த சகோதரரின் மனைவியான அமல் ராஜசேகர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவுச் செய்தியை அறிந்த முதலமைச்சர் விஜய், உடனடியாக நேரில் சென்று உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், விஜய்யின் பெற்றோரும் நேரில் சென்று அமல் ராஜசேகரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.