போட்றா தீபாவளி வெடிய... தமிழகம் முழுவதும் 10,244 பட்டாசு கடைகளுக்கு அனுமதி... !
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அமைப்பதற்கு தீயணைப்புத் துறை தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது.
நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க வியாபாரிகள் விண்ணப்பித்துள்ளனர். பட்டாசு கடைகள் அமைப்பதற்கு தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும். இதில் தீயணைப்புத் துறையின் சான்றிதழ் கிடைத்த பிறகே மற்ற துறைகளின் அனுமதியைப் பெற முடியும்.
இதன்படி, தமிழகம் முழுவதும் பட்டாசு கடைகள் அமைப்பதற்காக தீயணைப்புத் துறைக்கு இதுவரை 12,098 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் 10,244 விண்ணப்பங்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், போதிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் 940 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 914 விண்ணப்பங்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. தடையில்லா சான்றிதழ் கிடைத்திருப்பது மட்டுமே கடை நடத்துவதற்கான இறுதி உரிமம் அல்ல; சம்பந்தப்பட்ட பிற துறைகளின் அனுமதியையும் பெற வேண்டும்.