undefined

22 வயசுல  பிரசவமான மறுநாளே தேர்வு...  தமிழகத்தின் முதல் பெண் பழங்குடியின நீதிபதி...  முதல்வர் பெருமிதம்!  

 

அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருப்பவர்கள் கூட முன்னேற ஒரே உறுதியான வழி கல்வி மட்டும் தான். இதனை அந்தந்த காலகட்டத்தில் யாராவது ஒருவர் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் பழங்குடியின பெண் ஒருவர்  முதன்முறையாக நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை அடுத்த புலியூர் மலை கிராமத்தில் வசித்து வரும்  பழங்குடியின பெண் ஸ்ரீபதி . 22 வயதான ஸ்ரீபதி   ஏலகிரி மலையில் உள்ள பள்ளியில் கல்வி கற்ற பின்  பி.ஏ, பி.எல் சட்டப்படிப்பு படித்தார். படித்துக்கொண்டிருக்கும்போதேஸ்ரீபதிக்கு திருமணம் ஆகிவிட்டது. டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாரான போது கர்ப்பிணியானார்.  இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வு நடைபெற்றது.

அதில் “திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை  புலியூர் கிராமத்தில் வசித்து வரும்   திருமதி ஸ்ரீபதி  23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.   வசதிகள் எதுவும் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் மிக இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.அதுவும் நமது  திராவிட மாடல் அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணை மூலம்  ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள். சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்!
"நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, 
 நல்ல நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி!
பெற்றநல் தந்தைதாய் மாரே, 
 நும் பெண்களைக் கற்கவைப் பீரே!
இற்றைநாள் பெண்கல்வி யாலே,
 முன் னேறவேண் டும்வைய மேலே!"
எனப் பதிவிட்டுள்ளார். 
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்