தமிழக மீனவர்கள் பலி... ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல்; தேடுதல் பணி தீவிரமடைந்தது!

 

ஆந்திர மாநிலக் கடல் பகுதியில் எதிர்பாராதவிதமாகப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திர மாநில முதலமைச்சர் நாரா சந்திரபாபு நாயுடு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ஆந்திரக் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு கவிழ்ந்து தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உடனடியாகத் தமிழக அரசு அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு ஒருங்கிணைந்து செயல்படுமாறு தனது மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்த தமிழக மீனவர்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, அவர்களது சொந்த ஊர்களுக்கு உரிய மரியாதையுடன் கொண்டு சேர்க்க தேவையான அனைத்துத் தரப்பு உதவிகளையும் விரைந்து செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த விபத்தின் போது படகில் இருந்த மேலும் 2 தமிழக மீனவர்கள் கடலில் மூழ்கி மாயமாகியுள்ளனர்.

காணாமல் போன அந்த 2 மீனவர்களையும் விரைவாகக் கண்டறியும் வகையில் கடலோரக் காவல் படை மற்றும் மீட்புக் குழுவினரை உடனடியாகக் களத்தில் இறக்கி, தேடுதல் பணிகளை மேலும் தீவிரப்படுத்துமாறு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தர பிறப்பித்துள்ளார். உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திர அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.