கார்த்திகை பௌர்ணமியில் அதிர்ச்சி... மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் விலை !
Nov 24, 2026, 09:51 IST
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.920 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் ரூ.92,800-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.920 உயர்ந்து ரூ.93,720-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.115 உயர்ந்து ரூ.11,715-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்வு நகை வாங்குவோர் மத்தியில் சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றித் தொடர்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.175-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.