தங்கம் விலை மீண்டும் உயர்வு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.360 அதிகரிப்பு!
Nov 2, 2026, 10:10 IST
தமிழகத்தில் தங்கம் விலை இன்று (நவம்பர் 2) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.1,02,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (நவம்பர் 1) ஒரு சவரன் தங்கம் ரூ.1,01,840-க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து புதிய விலையை எட்டியுள்ளது.
அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலையும் ரூ.45 அதிகரித்துள்ளது. நேற்று ரூ.12,730-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று ரூ.12,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே, வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தீபாவளி பண்டிகைக் காலத்தில் தங்கம் வாங்கத் திட்டமிடுவோர், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை அறிந்து கொள்வது அவசியமாகியுள்ளது.