மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை...  ஒரே நாளில் சவரனுக்கு ரூ.760 உயர்வு!  

 

 

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,280-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.1,06,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.95 அதிகரித்து ரூ.13,255 ஆக உள்ளது. ஒரே நாளில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.205-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,05,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், நகை வாங்குவோர் அன்றைய விலை நிலவரத்தை அறிந்துகொண்டு வாங்குவது அவசியம்.