undefined

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் – தமிழக அரசு ஆணை!

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (டாஸ்மாக்) பணிபுரியும் ஊழியர்களுக்கு 20% வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, டாஸ்மாக்கில் பணிபுரியும் C மற்றும் D பிரிவு ஊழியர்கள், மேலும் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய பணியாளர்கள் ஆகியோருக்கு இந்த நன்மை வழங்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் அடிப்படையில் மொத்தம் 24,816 தகுதியுடைய பணியாளர்களுக்கு ரூ.40.62 கோடி செலவில் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த முடிவு ஊழியர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தி, அவர்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு உதவும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?