உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க்கிற்குக் கூடுதல் பொறுப்பு - தமிழக அரசு உத்தரவு!
Sep 29, 2026, 19:52 IST
தமிழ்நாடு காவல்துறை உளவுப் பிரிவு ஐ.ஜி.-யாகப் பணியாற்றி வரும் அஸ்ரா கார்க், உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி. மற்றும் சென்னை காவல் நுண்ணறிவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி. ஆகிய கூடுதல் பொறுப்புகளையும் சேர்த்து கவனிப்பார் எனத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.
உளவுப் பிரிவு ஐ.ஜி.யாகத் திறம்படச் செயல்பட்டுவரும் அஸ்ரா கார்க்கிற்கு, உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி. மற்றும் சென்னை காவல் நுண்ணறிவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி. ஆகிய கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே வடக்கு மண்டல ஐ.ஜி.யாகப் பணியாற்றி வந்த அஸ்ரா கார்க் உளவுத்துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவரது பணிகள் காவல்துறையிலும் மக்களிடையேயும் நல்ல இணக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பாராட்டுகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.