ரூ.6,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு!
Sep 12, 2026, 16:20 IST
தமிழக அரசு சார்பில் ரூ.6,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்பனை செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தில் பல்வேறு காலக்கெடுவைக் கொண்ட பிணையப் பத்திரங்கள் மறுவெளியீடு செய்யப்படுகின்றன. 7.49 சதவீதம் கொண்ட தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2036-க்கு ரூ.2,000 கோடி. 7.62 சதவீதம் கொண்ட பத்திரங்கள் 2041-க்கு ரூ.2,000 கோடி, 7.70 சதவீதம் கொண்ட பத்திரங்கள் 2051-க்கு ரூ.2,000 கோடி என மொத்தம் ரூ.6,000 கோடி மதிப்பிலான பத்திரங்கள் ஏலம் விடப்படவுள்ளன.
இந்த பிணையப் பத்திரங்களுக்கான ஏலம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி அன்று மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.