இலவச லேப்டாப் ஒன்றுக்கு ரூ.21,650க்கு கொள்முதல் செய்யும் தமிழக அரசு!
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கும் திட்டம் மீண்டும் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மடிக்கணினியையும் ரூ.21,650க்கு மாநில அரசு கொள்முதல் செய்ய இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 2025–26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப சாதனங்கள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் முதல்கட்டமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின்படி *டேப்லெட்* அல்லது லேப்டாப் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது. இதற்காக நடப்பாண்டில் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்கீழ், முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதற்கான ஒப்பந்தத்தை ஹெச்.பி (HP), டெல் (Dell), ஏசர் (Acer) ஆகிய 3 முன்னணி நிறுவனங்களுடன் எல்காட் (ELCOT) நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு லேப்டாப்பிற்கும் ரூ.21,650 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாத இறுதிக்குள் மடிக்கணினி விநியோகப் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் வகையில் அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டம் முழுமையாக நிறைவேறியதும், 20 லட்சம் மாணவர்கள் நேரடியாகப் பயன் பெறுவார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!