தமிழ்நாட்டில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு!
Aug 31, 2026, 18:10 IST
தமிழ்நாட்டில் நிர்வாக நலன் கருதி உதவி காவல் கண்காணிப்பாளர்கள் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளராக அன்ஜித் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். பட்டுக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளராக அங்கிதா பொறுப்பேற்க உள்ளார்.
திருச்செங்கோடு உதவி காவல் கண்காணிப்பாளராக அஸ்வினி நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளராக பிஸ்வாஜித் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.