தமிழக அரசின் 5 மாத வருவாய் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்தது: நிதி நிலை குறித்த விரிவான விவரங்கள்!

 

நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் நிதிநிலை குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கடந்த ஐந்த மாத காலத்தில் அரசின் வருவாய் மற்றும் செலவினங்கள் குறித்த முக்கியத் தரவுகள் வெளியாகியுள்ளன.

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் மொத்த வருவாய் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 791 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில் அரசின் ஒட்டுமொத்த செலவு ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 140 கோடியாக உள்ளது. இதன் காரணமாக 20 ஆயிரத்து 349 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மாநில அரசின் ஜிஎஸ்டி (SGST) மூலமாக 36 ஆயிரம் கோடியும், பதிவுத்துறை மூலமாக 10,000 கோடியும், மாநில ஆயத்துறை மூலமாக 2,000 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. மேலும், மத்திய அரசின் பங்குத் தொகையாக 24 ஆயிரம் கோடி ரூபாய் வரப்பெற்றுள்ளது. இதன் மூலம் அரசின் மொத்த வருவாய் ஒரு லட்சம் கோடியைக் தாண்டியுள்ளது.

அரசின் செலவினங்களில் கடன்களுக்காகச் செலுத்தப்பட்ட வட்டியின் பங்கு மட்டும் 25 ஆயிரத்து 991 கோடி ரூபாயாகவும், அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்துக்கான பங்கு 21 ஆயிரத்து 8 கோடி ரூபாயாகவும் மிக அதிக அளவில் பதிவாகியுள்ளது.

நடப்பு நிதியாண்டின் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் அரசு தரப்பில் 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. எனினும், கடந்த மாதத்தில் தமிழக அரசு புதிய கடன் எதுவும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.