தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு !
Nov 24, 2026, 16:20 IST
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய வடமாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனுடன் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மொத்தம் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது