இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை! நீலகிரி, கோவைக்கு முக்கிய எச்சரிக்கை!

 

 

தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை தொடரும் நிலையில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று (செப்.18) முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த இரண்டு மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்.18 முதல் செப்.21 வரை கனமழைக்கான எச்சரிக்கை இடம்பெற்றுள்ளது.

 செப்.18 அன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அடுத்தடுத்த நாட்களிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை நீடிக்க வாய்ப்புள்ளது.

 

நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும்போது சாலைகளில் மழைநீர் தேங்குவது, மண் சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.மேலும், வானிலை நிலவரம் மற்றும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை தொடர்ந்து கண்காணிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.