தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவராக தவெக நிர்வாகி சிவா நியமனம்!

 

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் புதிய தலைவராக தவெக சென்னை வடக்கு வட மாவட்டச் செயலாளர் சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.

வாரியத்தின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தவும், பொதுமக்களுக்கான வீட்டுவசதித் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தி முடிப்பதற்கும் இவருக்கு இந்த முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள சிவாவிற்குத் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் நேரில் சென்றும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.